மயானத்தில் மாந்திரீக மண்டை ஓடு, கோழி தலை.. அச்சத்தில் கிராம மக்கள் !!
மயானத்தில் மாந்திரீக மண்டை ஓடு, கோழி தலை.. அச்சத்தில் கிராம மக்கள் !!
மயானத்தில் மாந்திரீகம் செய்யப்பட்ட மண்டைஓடு கிடந்ததால் பரபரப்பு நிலவியது மண்டை ஓட்டை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது சாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புல்லமுத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய கிராமனத்தினர் ஏற்பாடு செய்தனர்.
மயானத்தில் இறந்தவர் உடலை எரியூட்டும் இடத்தை சுத்தம் செய்தபோது எரியூட்டும் இடத்தில் சாக்கு ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். அதனை திறந்து பார்த்த போது சாக்குப்பையின் உள்ளே மனித மண்டை ஓடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிராம மக்கள் மயானத்தில் திரண்டனர்.
அந்த சாக்குப் பையில் மனித மண்டை ஓடு, சேவல் தலை, மாவு போன்ற பொருள் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர்கள் மாந்திரீகம் செய்து மண்டை ஓடு மற்றும் மாந்திரீகம் செய்த பூஜை பொருட்களை சாக்குப்பைக்குள் போட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கைப்பற்றிய மண்டை ஓடு மற்றும் மாந்திரீக பொருட்களை மீண்டும் சாக்கில் போட்டு குழி தோண்டி புதைத்தனர். மேலும் மாந்திரீக பூஜை செய்து மண்டை ஓட்டை மயானத்தில் புதைத்து சென்றவர்கள் யார்? எதற்காக பூஜை செய்தனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மயானத்தில் மண்டை ஓடு கிடந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in