#BIG NEWS:- பெரும் விபத்து.. 10 மாணவர்கள் உட்பட 16 பேர் பலி..!

#BIG NEWS:- பெரும் விபத்து.. 10 மாணவர்கள் உட்பட 16 பேர் பலி..!

Update: 2022-07-04 11:12 GMT

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு பகுதியில் இருந்து இன்று காலை 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சைன்ஜ் நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

நியோலி - ஷன்ஷேர் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சைன்ஜ் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 10 பேர் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குலு மாவட்ட போலீஸ் அதிகாரி அசுதோஷ் கர்க் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து பேசிய அசுதோஷ் கர்க், “ஜங்லா பகுதியில் ஏற்பட்ட விபத்து சுமார் காலை 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Similar News