#BREAKING:- மால்கள், தியேட்டர்கள், கடைகளில் கட்டுப்பாடு அமல்..!

#BREAKING:- மால்கள், தியேட்டர்கள், கடைகளில் கட்டுப்பாடு அமல்..!

Update: 2022-07-04 13:36 GMT

சென்னையில், மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்திருக்கும் உத்தரவில், ‘ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் போன்றவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்களும், அங்கு பணிபுரியும் ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

வணிக நிறுவனங்கள், தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்க, கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News