மம்தா பானர்ஜி ஒரு முட்டாள்.. காங்கிரஸ் தலைவர் சாடல்..!

மம்தா பானர்ஜி ஒரு முட்டாள்.. காங்கிரஸ் தலைவர் சாடல்..!

Update: 2022-03-12 17:34 GMT

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், “காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது; காங்கிரசை நம்பி இருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஆர்.சவுத்ரி சவுத்ரி கூறியதாவது; “முட்டாள் மனிதருக்கு பதிலளிப்பது சரியான அணுகுமுறை அல்ல.


காங்கிரசுக்கு நாடு முழுவதும் 700 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மம்தா பானர்ஜி அத்தனை எம்.எல்.ஏ-க்களை கொண்டுள்ளாரா.. எதிர்க் கட்சிகளின் மொத்த வாக்குப் பகிர்வு சதவீதத்தில், 20 சதவீதம்  காங்கிரஸ் வசம் உள்ளது.

மம்தாவிடம் இருக்கிறதா..? பாஜகவை மகிழ்விப்பதற்காக மம்தா இப்படிச் சொல்கிறார். மேலும், அவர் பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார். இந்த விஷயம் தொடர்புடைய கருத்துக்களை பேச வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.

காங்கிரசுக்கு எதிராக ஏன் கருத்து கூறுகிறீர்கள்..? காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள். இதை அவர்  நினைவில் கொள்ள வேண்டும்.

பாஜகவை மகிழ்விக்க அவர்கள் கோவா சென்றார்கள். அவர்கள்தான் காங்கிரசை தோற்கடித்தனர். நீங்கள் கோவாவில் காங்கிரசை தோற்கடித்தீர்கள். இது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

Similar News