பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம் தான்- மம்தா பானர்ஜி தாக்கு !!

பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம் தான்- மம்தா பானர்ஜி தாக்கு !!

Update: 2022-02-01 17:08 GMT

சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
  
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரயில் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

வருமான வரி உச்ச வரம்பு தொடர்பான அறிவிப்பு இல்லாததால் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் 

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம்தான் உள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது, இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட், சாடியுள்ளார்.  


newstm.in

Tags:    

Similar News