மனைவியை கொன்றுவிட்டு ரயில் கழிவறையில் பதுங்கியவர் கைது!!

மனைவியை கொன்றுவிட்டு ரயில் கழிவறையில் பதுங்கியவர் கைது!!

Update: 2022-05-29 08:33 GMT

மும்பை கொரஹன் அருகே சந்தோஷ் நகரில் அன்சர் அலி (29) - ரோஷி ஹதுன் தம்பதி அண்மையில் புதிய வீட்டில்  குடியேறினர். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தை மீது அன்சருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு  கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அன்சர் அலி தனது மனைவி ஹதுனை அடித்துக்கொலை செய்தார்.

பின்னர், மனைவியை கொலை செய்தது குறித்து மனைவியின் சகோதரிக்கு போனில் தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். இது குறித்து உயிரிழந்த பெண்ணின் சகோதரி உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் அன்சர் மும்பையில் இருந்து உத்தரபிரதேசம் செல்லும் ஷப்ரா- ஹொடன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து அந்த ரயிலை பின் தொடந்த போலீசார் உத்தரப்பிரதேசத்தில் பிரயங்ராஜ் நகரில் ரயிலை பிடித்தனர். உள்ளே சோதனை நடத்திய போது, கழிவறையில் அன்சர் அலி பதுங்கி இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அன்சர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in



 

Similar News