நாளை முதல் சென்னையில் கட்டாயம் - சென்னை மாநகராட்சி உத்தரவு..!!
நாளை முதல் சென்னையில் கட்டாயம் - சென்னை மாநகராட்சி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 2,662 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1,060 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோயம்புத்தூரில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.