திருமணம் செய்த கல்லூரி மாணவி.. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்..!
திருமணம் செய்த கல்லூரி மாணவி.. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்..!
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சுரேஷ் (21). இவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சுரேஷின் அக்கா கருந்தேவ பாளையத்தில் வசித்து வருகிறார். இங்கு சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் வசித்து வரும் லோகநாதன் என்பவரின் மகள் புனித மணி(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. புனித மணி கந்தம் பாளையத்தில் உள்ள மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், பாதுகாப்பு கேட்டு நல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி சமாதானம் செய்த போலீசார், கல்லூரி மாணவி புனித மணியை சுரேஷ் குடும்பத்துடன் அனுப்பி வைத்தனர்.