இனி விமானப் பயணத்துக்கு முகக்கவசம் கட்டாயம்.. புதிய உத்தரவு !!

இனி விமானப் பயணத்துக்கு முகக்கவசம் கட்டாயம்.. புதிய உத்தரவு !!

Update: 2022-06-09 08:01 GMT

முகக்கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் இறந்து இறக்கிவிடலாம் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மிகமிக முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் தொற்று கட்டுக்குள் இருப்பதால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது இல்லை. இந்த நிலையில் விமான பயணத்தில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, விமானத்தில் பயணிப்பவா்கள் சரியாக முகக் கவசம் அணிந்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். விதிவிலக்கான சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். பயணிகள் கூடுதலாக முகக்கவசம் கேட்டால் விமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணியை விமானம் புறப்படும் முன்பே விமான நிறுவனங்கள் இறக்கிவிடலாம். நடுவானில் பறக்கும்போது கொரோனா விதிகளை மீறி யாராவது முகக் கவசம் அணிய மறுத்தால், அவரை ஒழுங்கீனமான பயணிகள் பட்டியலில் சோ்க்கலாம். குறிப்பிட்ட காலம் வரை அவருக்கு விமானப் பயணத்துக்கு தடை விதிக்கலாம்.

விமானத்தில் பயணிப்பவா்கள், அவா்களை வரவேற்கவும் வழியனுப்பவும் வருபவா்கள், விமானிகள், விமானப் பணிப்பெண்கள், பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில சட்டத்தின்படி அபராதம் விதிக்கலாம். தேவைப்பட்டால், அவா்களை பாதுகாப்புப் படையினரிடமும் ஒப்படைக்கலாம், என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News