முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு !!

முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு !!

Update: 2022-07-04 20:12 GMT

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 இல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 12.02.2022ம் தேதி முதல் 20.02.2022ம் தேதி வரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான உத்தேச விடை குறிப்பு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியாது. இதில் 4,276 தேர்வர்களின் இணையவழியிலான விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அவை 115 பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களின் இறுதி முடிவின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில் விடைகள் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
newstm.in
 

Similar News