மே-15 புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பு..!!

மே-15 புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பு..!!

Update: 2022-05-13 12:05 GMT

இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

தற்போது, தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற மே 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்து இருக்கிறது. இவர் வருகிற 15-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி பிறந்த ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள ராஜீவ் குமார் மத்தியிலும், பீகார்/ஜார்கண்ட் மாநிலத்திலும் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மே 15ஆம் தேதியன்று ராஜீவ் குமார் இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News