எனக்கு எண்ட் கார்டு போடுறீங்களா? - புகைப்படத்துடன் மியா கலிஃபா கொடுத்த பதிலடி !!

எனக்கு எண்ட் கார்டு போடுறீங்களா? - புகைப்படத்துடன் மியா கலிஃபா கொடுத்த பதிலடி !!

Update: 2022-02-03 12:43 GMT

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது ஆபாச படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் மியா கலிஃபா லெபானான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் குடியேறினார். அவர் என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது.

இதற்கெல்லாம் உச்சமாக, ஆபாச பட நடிகை மியா கலிஃபா உயிரிழந்து விட்டதாக ஒரு செய்தியை சில விஷமிகள் ட்விட்டரில் டிரோல் செய்து விட்டனர். இதனால் மியா கலீபாவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். 

இதனை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார் நடிகை மியா கலிஃபா. நான் இன்னும் இறக்கவில்லை. உயிரோடு இருப்பதாகவே உணர்கிறேன் என்று புகைப்படத்தை பதிவிட்டு டிரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். மியா கலிஃபாவின் முகநூலில் இவருடன் வாழ்ந்த நினைவுகளைப் பகிருங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் நடந்த குழப்பம் என்று அவருடைய ரசிகர்கள் விளக்கியுள்ளனர்.


இதற்கு பின்னால் இருக்கும் ஒரு கதையை நாம் இங்கு பார்க்கலாம். அதாவது, இன்றைய நவீன உலகில் பலரும் தங்களுக்குப் பிடிக்காத நடிகர், நடிகைகளை இணையத்தில் டிரோல் செய்து வருகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது சினிமா பிரபலங்கள்தான். நீண்ட காலமாக பொதுவெளியில் தோன்றாத பிரபலங்களை இறந்துவிட்டதாக சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பிரபலத்துக்கு வேண்டப்பட்டவர்கள், அவரை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றர். அப்போதுதான் இப்படியொரு வதந்தி பரவியது சம்பந்தப்பட்ட பிரபலத்துக்கே தெரிய வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிக்கி பிழைத்திருப்பது நடிகை ஆபாச பட நடிகை மியா கலிஃபா.

newstm.in

 
 

Similar News