இறைச்சி விற்பனைக்கு தடை.. மேயர் உத்தரவால் சர்ச்சை..!

இறைச்சி விற்பனைக்கு தடை.. மேயர் உத்தரவால் சர்ச்சை..!

Update: 2022-04-06 04:30 GMT

நவராத்திரியை முன்னிட்டு தெற்கு டில்லியில் 11-ம் தேதி வரை இறைச்சி கடைகளை அடைக்க வேண்டும் என தெற்கு டில்லி மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “நவராத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை.


இந்த பண்டிகை காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, கடுமையான சைவ உணவு விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.

மாமிசங்களால் அவர்களின் மத ரீதியான உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதால், நவராத்திரி நடக்கும் ஏப்ரல் 2 முதல் 11-ம் தேதி வரை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

இந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

விதிகளை மீறி இறைச்சி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேயரின் இந்த உத்தரவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛இதுபோன்ற கொள்கை விதிகள் எதுவும் இல்லாததால், உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த முடியாது.

இந்த தடை உத்தரவானது அதிகாரிகளால் வணிகர்களை துன்புறுத்துவதற்கான வழிவகுக்கும் என்பதால் இது நல்லதல்ல’ எனக் கூறினார்.

Similar News