ஃபேஸ்புக்கில் இந்த வசதியை நிறுத்துகிறது மெட்டா நிறுவனம்.. பயனர்கள் அதிர்ச்சி

ஃபேஸ்புக்கில் இந்த வசதியை நிறுத்துகிறது மெட்டா நிறுவனம்.. பயனர்கள் அதிர்ச்சி

Update: 2022-05-10 18:59 GMT

ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் முக்கியமான சமூகவலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு கலக்கி வருகின்றனர். இதில் பலரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாக நல்ல நண்பர்களாகவும், தம்பதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது நியர்பை பிரண்ட்ஸ் (near by friends) என்ற வசதி உள்ளது. அதாவது, நாம் இருக்கும் இடத்தின் அருகிலேயே  ஃபேஸ்புக் பயன்படுத்தும் நபர் இருந்தால் அவரை நியர்பை பிரண்ட்ஸ் என காட்டும். 

அதாவது, ஃபேஸ்புக்கில் இருக்கும் சில முக்கிய வசதிகளில் ஒன்றான நாம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள நண்பர்களின் தொடர்புகளைத் தெரிவிக்கும் ‘நியர்பை பிரண்ட்ஸ் (near by friends) வசதியை வருகிற மே-31 ஆம் தேதியுடன் நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பயனர் சென்றுவந்த இடங்கள் குறித்த தகவல்களும் நிறுத்தப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. 


newstm.in
 
 

Similar News