ஆற்றுக்குள் மெட்ரோ ரயில் நிலையம்.. 80% பணிகள் நிறைவு.. அடுத்தாண்டு திறப்பு !!

ஆற்றுக்குள் மெட்ரோ ரயில் நிலையம்.. 80% பணிகள் நிறைவு.. அடுத்தாண்டு திறப்பு !!

Update: 2022-04-07 06:30 GMT

ஆற்றுக்குள் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. இந்தியாவில் முதல்முறையாக ஆற்றில் மெட்ரோ ரயில் நிலையம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதி மெட்ரோ ரயில் கட்டும் திட்டம் நீண்ட காலத்துக்கு பிறகு செயல்படுத்தப்பட்டது. அதன்படி நதியில் 33 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இத்திட்டத்துக்கான ஆரம்பப் பணிகள் 2006 -07ஆம் ஆண்டிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு ரூ. 4,874 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ரூ. 8,575 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இப்பணிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் தான் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், ஹூக்ளி நதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் நிறவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிலையப் பணிகளின் மேற்பார்வையாளர் மிதுன் கோஷ் தெரிவித்துள்ளார். இன்னும் 20 சதவிகிதப் பணிகள் எஞ்சியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன் மாதம் இத்திட்டம் தொடங்கப்படாது என்றும் குறிப்பிட்டார். இதனால் இப்பணிகள் முடிவடைந்து 2023ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என்றும் குறிப்பிட்டார். 

இந்தியாவில் முதல்முறையாக ஆற்றில் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


newstm.in

Tags:    

Similar News