இவர்களுக்கு 25,000 மானியத்தில் இருசக்கர வாகனம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!

இவர்களுக்கு 25,000 மானியத்தில் இருசக்கர வாகனம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!

Update: 2022-05-27 13:55 GMT

ஹஜ் என்றால் நாடுதல் என்று பொருள். இறைவனை நாடி மெக்காவில் உள்ள கஃபத்துல்லாவுக்கு சென்று வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதே ஹஜ் பயணம் என்பதாகும். இந்தப் பயணத்தை நினைக்கும் போதெல்லாம் ஆண்டு முழுவதும் செய்ய முடியாது. இஸ்லாமிய மாதத்தின் படி துல்ஹஜ் மாதம் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

 

இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியாதாவது, தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 1,500 பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 1,500 பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஹஜ் பயணம் கேரளாவில் இருந்து தொடங்கும் என்றும் பயணத்திற்கான உணவு, இருப்பிடச்செலவை அரசே ஏற்கும். உலமாக்க நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படும். ஓய்வு பெற்ர உலமாக்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.

Similar News