அமைச்சர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!!

அமைச்சர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!!

Update: 2022-06-08 06:00 GMT

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரின் வீடுகளிலிருந்து ரூ.2.85 கோடி ரொக்கப்பணம், 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில், ரூ.2.82 கோடி ரொக்கப் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஹவாலா பணப்பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்துள்ளது.

சத்யேந்திர ஜெயினை நாளை வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சி.பி.. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் பா... தலைவர்கள் ஆம் ஆத்மி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

newstm.in

Similar News