விரைவில் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் - அமைச்சர் வளர்மதி..!!

விரைவில் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் - அமைச்சர் வளர்மதி..!!

Update: 2022-06-29 05:15 GMT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனிடையே நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடரந்து, துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பவர் ஓபிஎஸ். துரோகம் என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்று என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இபிஎஸ் ஆதரவளாரான முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலிவோடும் பொழிவோடும் வழிநடத்திச் சென்றார். அதிமுக கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமே திமுகவை வீழ்த்துவது தான். அதற்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தையும் ஆட்சியும் சிறப்பாக நடத்தினார்.

மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசியது தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

அவரும் அவரது மகனும் திமுகவோடு உறவு வைத்துள்ளனர். ஓபிஎஸ், அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான். விரைவில் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என தெரிவித்தார்.

Similar News