ரத்தம் மாற்றும்போது தவறு… 4 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு!!

ரத்தம் மாற்றும்போது தவறு… 4 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு!!

Update: 2022-05-26 18:45 GMT

ரத்தம் மாற்றும் போது ஏற்பட்ட தவறால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி(HIV) தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு குழந்தைகளுக்கும் பிறப்பிலேயே தலசீமியா என்ற ரத்த சோகை பாதிப்பு நோய் இருந்ததால் அவர்களுக்கு தொடர்ச்சியாக ரத்த மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்ற போதுதான் எச்ஐவி தவறுதலாக பரவியுள்ளது.

பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் உணவு மற்றும் மருந்துகள் ஆணையமும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. பொதுவாக சிகிச்சைக்காக குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்னர் அந்த ரத்தம் NTA பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால், ரத்த வங்கியில் இந்த பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால், இந்த குழந்தைகள் எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, ரத்த வங்கியில் பெற்ற ரத்தம் மூலம் ஐந்து குழந்தைகளுக்கு ஹெப்பாடிடிஸ் சி பாதிப்பும், இரு குழந்தைகளுக்கு ஹெப்பாடிடிஸ் பி பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், தற்போது எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Similar News