மோடியும், அமித் ஷாவும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள் : ராதாரவி பரபரப்பு பேச்சு!!
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள் : ராதாரவி பரபரப்பு பேச்சு!!
இந்தியாவில் பெரிய 2 அக்யூஸ்டுங்க யார்னு கேட்டா அது மோடியும், அமித்ஷாவும்தான் என நடிகர் ராதாரவி பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
நடிகர் ராதாரவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார். அவர் பேசும்போது இந்தியாவின் பெரிய அக்யூஸ்டு மோடி ஜியும், அமித்ஷாவும்தான் என பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்காங்க. ஒன்று யார்னா அது நம்ம மோடி ஜி. மற்றொன்று யார்னா அது அமித்ஷதான். இத எல்லோரும் நியாபகம் வச்சுக்கோங்க. இந்த இரண்டு பேரும் கரு அறுத்துருவாங்க ஜாக்கிரதை என தெரிவித்துள்ளார்.
இவரின் அந்த பேச்சை கேட்டு அங்கிருந்த பா.ஜ.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையத்தில் நடிகர் ராதாரவியின் பேச்சு வைரலாகி பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in