முதுகெலும்பை உடைத்தார் மோடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

முதுகெலும்பை உடைத்தார் மோடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Update: 2022-02-25 20:14 GMT

“இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறை முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நண்பர்கள் உடைத்துள்ளனர்” என, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஜகதீஷ்பூரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ராகுல் காந்தி பேசியதாவது: “காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என பாஜகவினர் கூறுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எந்தவொரு வேலைவாய்ப்பையும் கொடுக்கவில்லை.

மாறாக, சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தான் வேலைவாய்ப்பு அளிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறையின் முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நண்பர்கள் உடைத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். கோவிட் சமயத்தில் நான் சொல்வதை யாரும் கேட்கவில்லை; ஆனால், கங்கையில் உடல்கள் மிதந்ததை மக்கள் பார்த்தனர்” என அவர் பேசினார்.

Similar News