பாஜக மாநில நிர்வாகி மீது பண மோசடி புகார்!!
பாஜக மாநில நிர்வாகி மீது பண மோசடி புகார்!!
கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பாஜக மாநில விவசாயி அணி துனை தலைவர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த எஸ். ஆர். தேவர் பாஜக மாநில விவசாயி அணி துணைத் தலைவராக உள்ளார்.
இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பொத்ரா என்பவரிடம் ரூ.200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 4 கோடி ரூபாய் பண மோசடி செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரை கைது செய்ய சத்தீஸ்கர் மாநில போலீசார் 4 பேர் எஸ்.ஆர்.தேவர் வீட்டிற்கு வந்தனர். ஆனால் தகவல் அறிந்த அவர் தலைமறைவான நிலையில், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது வீட்டில் கைது செய்ய பிடி வாரண்ட் நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
இவர் மீது பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ள நிலையில், சில வழக்குகளில் முன்னதாக சிறைக்கும் சென்றுள்ளார்.
மேலும் எஸ். ஆர். தேவர் மோசடி புகாரில் ஏற்கனவே ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in