உபியில் 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை..?
உபியில் 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை..?
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய்க்கான லேசான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமிக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. ஆனால், இதுவரை இந்தியாவில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டதுடன், தழும்புகள் தோன்றியுள்ளது. இதையடுத்து, இது குரங்கு அம்மை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதை தவிர, வேறு எந்த அறிகுறிகளும் சிறுமிக்கு ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த யாரையும் அந்த சிறுமி சந்திக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாக அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.