தென்மாவட்டங்களில் மேலும் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தென்மாவட்டங்களில் மேலும் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

Update: 2022-04-19 18:15 GMT

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆனால் தென்மாவட்டங்கள் மற்றும் கடலூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது, தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (ஏப்.21) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள், 22ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள்.

23ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராதாபுரம் 6 செ.மீ, நிலக்கோட்டை, சூரலக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது, என அதில் கூறப்பட்டுள்ளது.


newstm.in

Similar News