இரண்டரை வயது பெண் குழந்தை, ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனையை படைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால். எப்போதும் சிரித்த முகத்துடன் பார்ப்பவர்களை கொள்ளைக்கொள்ளும் இந்த குழந்தை தற்போது உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். இந்த சின்னஞ்சிறு வயதிலும் ஓவியங்கள் தீட்டுவதில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளார்.

அன்வி விஷேஷ், 9 மாத குழந்தையாக இருந்தபோதே வரையத் தொடங்கியுள்ளார். இதுவரை 72 ஓவியங்கள் வரைந்து ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனை படைத்துள்ளது. இது தவிர அன்வி, 1 வயது ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது, அந்நிய மொழியான ஸ்பானிஷ் மொழியின் 42 ஒலிப்பு ஒலிகளை பேசி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இந்த குழந்தை இடம்பெற்றுள்ளது. இன்னும் இவர் எத்தனை சாதனைகளை படைக்க காத்திருக்கிறாரோ என பலரும் பாராட்டி வருகின்றனர். 

newstm.in
 

Tags: