தாய் - மகன் தீக்குளித்து தற்கொலை.. ஆளுங்கட்சி நிர்வாகிகள் 6 பேர் கைது..!

தாய் - மகன் தீக்குளித்து தற்கொலை.. ஆளுங்கட்சி நிர்வாகிகள் 6 பேர் கைது..!

Update: 2022-04-20 16:15 GMT

தெலுங்கானா மாநிலம் கம்மா ரெட்டி மாவட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கங்கம் சந்தோஷ் (40) மற்றும் அவருடைய தாயார் பத்மா (65) ஆகியோர் கடந்த 16-ம் தேதி லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதற்கு முன்னதாக சந்தோஷ் எழுதி வைத்த கடிதம் மற்றும் பதிவு செய்த வீடியோவில், “ராமாயம்பேட்டை நகராட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி நிர்வாகிகள் 7 பேர் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகர்ஜூனா ரெட்டி ஆகியோர் எனக்கு தொல்லை கொடுக்கின்றனர்.

எனது தொழிலை நாசமாக்கியதுடன், வாழ்க்கையை மோசமாக்கி விட்டனர். எனது சொத்துக்கள் அனைத்தையும் அழித்து விட்டனர். என் மீது பதிவாகி ரத்து செய்த வழக்கு ஒன்று தொடர்பாக எனது செல்போனை நாகர்ஜூனா ரெட்டி பறித்துச் சென்றார்.

அதில் இருந்த முக்கிய தகவல்களை திருடி ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்தார். அதை வைத்து அவர்கள் எனக்கு தொல்லை கொடுத்தனர். எனது மரணத்திற்கு பிறகு நீதி கிடைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில், ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி நிர்வாகிகள் 6 பேரை கைது செய்தனர்.

Similar News