பள்ளி செல்லுமாறு கண்டித்த தாய்.. மாணவர் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சி !!

பள்ளி செல்லுமாறு கண்டித்த தாய்.. மாணவர் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சி !!

Update: 2022-06-26 18:18 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் கார்த்தி - உமா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜீவன், கிஷோர், முருகவேல் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கார்த்திகிற்கும், அவரது மனைவி உமாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், உமா 15 வயதான தனது மூத்த மகன் ஜீவனை தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கவைத்தார். ஜீவன் அங்குள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு சேர்ப்பதற்காக அங்கிருந்து மாற்று சான்றிதழை வாங்கி வந்து, வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை தாயார் உமா செய்து வந்துள்ளார்.
 
ஜீவன் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் தான் ஐடிஐ படிக்கவிரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால், 12ஆம் வகுப்பு வரை படி என்று தாய் உமா கூறியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த ஜீவன், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று மாணவனை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஜீவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு செல்லுமாறு தாய் கண்டித்ததால், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
newstm.in

Similar News