ரயில் மோதி கோர விபத்து- தாய், தந்தை, மகள், மருமகள் பலி.. சிசிடிவி வீடியோ !!
ரயில் மோதி கோர விபத்து- தாய், தந்தை, மகள், மருமகள் பலி.. சிசிடிவி வீடியோ !!
கடும் நிதி நெருக்கடி, உணவு பற்றாக்குறையில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் நடந்த ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் காலி - பூஸா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரயிலுடன் ஆட்டோ ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பெலியத்த நகரில் இருந்து வவுனியா நோக்கிப் விரைவு ரயில் ஒன்று சென்றுள்ளது. வழியில், ஆளில்லா ரயில்வே கேட்டில், தண்டவாளத்தை பயணிகள் ஆட்டோ ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது வேகமாக வந்த ரயில், திடீரென ஆட்டோ மீது மோதியது. அங்கிருந்த சிசிடிவியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகிய நான்கு பேரும் ஆட்டோவில் சென்றப்போது உயிரிழந்தனர். இந்த விபத்தில் முதலில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு நான்காக அதிகரித்தது.
newstm.in