மகளின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் காரணமாக கொல்லப்பட்ட தாய்!!

மகளின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் காரணமாக கொல்லப்பட்ட தாய்!!

Update: 2022-02-15 07:00 GMT

மகள் தனது வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸால் அவரது தாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் அருகே சிவாஜி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயது பெண்ணுக்கும் அவரது தோழிக்கும் இடையே ஏதோ தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு தகவலை வைத்திருந்தார்.

அது தன்னைத்தான் குறிக்கிறது என்று நினைத்து அவரது தோழி, குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தோழியின் உறவினர்கள், 20 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயார் லீலாவதி தேவி மற்றும் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த லீலாவதி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறுநாளே அவரது உயிர் பிரிந்து விட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் லீலாவதியின் மகள் நடந்த விபரங்களை கூறியுள்ளார். அவர் பொதுவாகத்தான் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும், அதை அவரது தோழி தவறாக புரிந்து கொண்டு இந்த சம்பவத்தை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தாக்குதலுக்கு காரணமாக இருந்த தோழியின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News