தாயின் அவசரம்.. திருமணமான 5 நாள்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !!

தாயின் அவசரம்.. திருமணமான 5 நாள்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !!

Update: 2022-03-11 10:11 GMT

திருமணமான ஐந்தே நாட்களில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த வடக்கு கொரட்டூர் பகுதியைச் சந்தியா (22) . பி.காம் பட்டதாரியான இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இப்பெண்ணின் உறவினரான சேலத்தை சேர்ந்த ராஜா (26), என்பவரும் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார்.

இந்நிலையில், உறவினர்களான சந்தியாவை, ராஜாவுக்கு திருமணம் செய்துவைக்க அப்பெண்ணின் தாயார் கவிதா முடிவு செய்தார். அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. இதற்கிடையில் சந்தியா, ஆவடியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வருவதாக தனது தாய் கவிதாவிடமும் கூறியுள்ளார். அதற்கு, அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி சந்தியா- ராஜா இருவருக்கும், பெற்றோர் சம்மதத்துடன் சேலத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு திரும்பினர்.

இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பலனின்றி, சந்தியா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமாகி ஒரு வாரம் ஆவதால், ஆர்.டி.ஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது. திருமணமாகி ஒரே வாரத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


  
newstm.in

Similar News