வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி.. 100 நாட்களாக விலையில் மாற்றமில்லை..!

வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி.. 100 நாட்களாக விலையில் மாற்றமில்லை..!

Update: 2022-02-12 11:30 GMT

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 100 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல் மற்றும்  டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி இரவில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது.

இதனால், அடுத்த நாளான தீபாவளி அன்று நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் சரிந்தது.

அன்று தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று (பிப்.12ம் தேதி) 100 நாட்கள் ஆகியும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News