வாகன ஓட்டிகள் கலக்கம்.. தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் விலை உயரும் அபாயம்..!
வாகன ஓட்டிகள் கலக்கம்.. தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் விலை உயரும் அபாயம்..!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 103 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 104-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, ‘உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.
ஆனால், தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படலாம்’ என்று, வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.