டெல்லி ஜும்மா மசூதி அருகே முஸ்லிம்கள் போராட்டம்..!

டெல்லி ஜும்மா மசூதி அருகே முஸ்லிம்கள் போராட்டம்..!

Update: 2022-06-10 18:26 GMT

இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து டெல்லி ஜும்மா மசூதி உட்பட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்து வெளியிட்ட பாஜக எம்பி நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜும்மா மசூதி அருகே முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

இது போல, ஹைதராபாத், உத்தரப் பிரதேசத்தில் சகாரன்பூர், மேற்குவங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

Similar News