காலை 10 மணிக்குள் ஆபீசில் ஆஜராகணும்.. தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு..!

காலை 10 மணிக்குள் ஆபீசில் ஆஜராகணும்.. தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு..!;

Update: 2022-07-27 16:01 GMT

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், பணியில் அலட்சியமாக இருப்பதாகவும் புகார்கள் வந்தது. இது, கர்நாடக தலைமைச் செயலர் வந்திதா சர்மாவின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இந்த நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்தில் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று தலைமைச் செயலர் வந்திதா சர்மா உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அலுவலக நேரத்தில் வெளியே செல்ல வேண்டியது இருந்தால், அந்த அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி அல்லது பொறுப்பு அதிகாரியிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அனுமதி பெறாமல் வெளியே சென்றாலோ, தாமதமாக பணிக்கு வந்தாலோ, பணியில் அலட்சியமாக இருந்தாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வந்திதா சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News