வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்! பீதியில் மக்கள்!!
வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்! பீதியில் மக்கள்!!
வானிலிருந்து மர்ம பொருள்கள் விழுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் கிராமத்தில் வானிலிருந்து மர்ம பொருள் ஒன்று இரவு நேரத்தில் விழுந்தது. அடுத்த நாள் காலை அதை பார்த்து அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் 10 அடிக்கு உலோகத்தால் செய்யப்பட்ட வளையம் இருந்ததால், வானிலிருந்து வேற்றுக்கிரக வாசிகள் இந்த பொருளைப் பூமியில் வீசியுள்ளதாக கூறிவந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த அதிகாரிகள் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த உலோக வளையத்தைப் பரிசோதனை செய்தனர். சோதனை முடிவில் அது விண்ணுக்கு ஏவப்பட்ட சீன ராக்கெட் ஒன்றின் பாகங்கள் என்பது தெரியவந்தது.
ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு ராக்கெட்டுகளின் துண்டுகள் இப்படி பூமியில் விழுவது வழக்கமான ஒன்றுதான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
One more satellite fragments remains found in Sindevahi #chandrapur. This satellite piece have fallen in a Pawan Ghat lake. #meteorshowers #Meteorshower#Nagpur https://t.co/6XjkUCxKtD pic.twitter.com/PyIzuc9ZAs
— Praveen Mudholkar (@JournoMudholkar) April 3, 2022
இப்படி விழுவதால் மக்களுக்கு எந்தவிதமாக பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் தேவையற்ற அச்சம் வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in