உக்ரைனுக்கு ஆதரவாக குவியும் நேட்டோ வீரர்கள்.. வரலாற்றில் முதல்முறையாக அதிக எண்ணிக்கை !!
உக்ரைனுக்கு ஆதரவாக குவியும் நேட்டோ வீரர்கள்.. வரலாற்றில் முதல்முறையாக அதிக எண்ணிக்கை !!
உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவில் படை வீரர்களை அனுப்ப தயார் படுத்தியுள்ளது நேட்டோ.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர், எந்த நாடும் உதவவில்லை என வேதனை தெரிவித்து வருகிறார்.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைன் இன்னும் நேட்டோவில் உறுப்பினராக ஆகாததால், ரஷ்யாவுக்கு எதிராக அந்த அமைப்பின் படைகள் உக்ரைனுக்குள் செல்லவில்லை. எனினும், உக்ரைனின் அண்டை நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, போலந்து ஆகிய நாடுகளில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகிறது.
அதாவது, இந்த நாடுகளில் 5 ஆயிரம் நேட்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக தற்போது 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணை அழிப்பு கருவியை ஸ்லோவாகியாவில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஐ.நா. எச்சரிக்கையை மீறி உக்ரைனில் ரஷ்யா போரைத் தொடர்ந்தால், உக்ரைனுக்கு உதவ அவசர கால ஏற்பாடாக 40 ஆயிரம் நேட்டோ வீரர்களை தயார்ப்படுத்தி வருவதாக நேட்டோ உயர் கமாண்டர் ஜெனரல் டாட் வோல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு இடத்துக்கு 40,000 வீரர்களைக் கொண்ட படையை நேட்டோ தயார்ப்படுத்தியுள்ளது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
newstm.in