வெளியானது நீட் ஹால் டிக்கெட்.. பதிவிறக்கம் செய்வது எப்படி..?: உள்ளே முழு விவரம்..!

வெளியானது நீட் ஹால் டிக்கெட்.. பதிவிறக்கம் செய்வது எப்படி..?: உள்ளே முழு விவரம்..!

Update: 2022-07-12 15:12 GMT

நாடு முழுவதும் வரும் 17-ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதில் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, நாடு முழுவதும் இருந்து 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது, கடந்த ஆண்டைவிட 2,57,562 கூடுதலாகும். தமிழகத்தில் மட்டும் 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள 497 நகரங்களின் விவரம் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் செவ்வாய்க்கிழமை (12-ம் தேதி) காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் என்டிஏ மின்னஞ்சல் முகவரியையோ, 011-40759000 என்ற உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி..?

1. neet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
2. முகப்புப் பக்கத்தில் "Download Admit Card for NEET (UG)- 2022 is Live Now" என்பதை கிளிக் செய்யவும்.
3. அதில், உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பின் எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
4. திரையில் உங்கள் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தோன்றும்.
5. அதை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டின் பின்புறம், நீட் தேர்வு மற்றும் அதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

Similar News