காலையில் நாகூர்.. மாலையில் வேளாங்கண்ணி.. பாஜக கூட்டம் குறித்து செல்லூர் ராஜூ..!

காலையில் நாகூர்.. மாலையில் வேளாங்கண்ணி.. பாஜக கூட்டம் குறித்து செல்லூர் ராஜூ..!

Update: 2022-06-05 05:10 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “எங்களுடைய பார்வையில், நாங்கள் தான் எதிர்க்கட்சி.

அதிமுக ஆயிரக்கணக்கான கிளைகள் கொண்ட இயக்கமாகும். அதிமுக என்றும் தமிழக மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கமாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான். தற்போது, கூட்டங்களில் 5 ஆயிரம் பேர், 10 ஆயிரம் பேர் திரட்டுவது என்பது பெரிய காரியமில்லை. நாங்களெல்லாம் காக்கா கூட்டமில்லை; கொள்கை கூட்டம்.

இரைகள் போட்டால் காக்கா கூடத்தான் செய்யும். இரை முடிந்ததும் பறந்து விடும். நாகூரில் காலையில் அதிக அளவில் புறாக்கள் இருக்கும்.

மாலையில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். இதே போல் நிறம் மாறும் புறாக்கள் எல்லாம் இருக்கின்றன.

முருகன் ஜி வந்தார், வேலைப் பிடித்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. தமிழிசை வந்தார், சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. 

அதுபோல ஒரு பதவி தனக்கும் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா..? அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு எறிவோம்” என்று அவர் கூறினார்.

Similar News