#BIG NEWS:- குழந்தைகள் முன் நிர்வாணம்.. பிரபல நடிகர் போக்சோவில் கைது..!

#BIG NEWS:- குழந்தைகள் முன் நிர்வாணம்.. பிரபல நடிகர் போக்சோவில் கைது..!

Update: 2022-07-07 12:39 GMT

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க் அருகே, காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், குழந்தைகளால் அந்த நபரின் பெயரை குறிப்பிட முடியவில்லை.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரின் கார் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து அவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து உட்கொண்டு வருவதாகவும் ஸ்ரீஜித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில், மாணவர்கள் குழு ஒன்று தங்கள் பள்ளிக்கு நடந்து சென்றபோது, காருக்குள் நிர்வாணம் காட்டியதற்காக பாலக்காடு போலீசாரால் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். பள்ளி செல்லும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்கவும் அவர் முயன்றதாக கூறப்படுகிறது.

நடிகர் ஸ்ரீஜித் ரவி, பிரபல மலையாள நடிகர் டிஜி ரவியின் மகன் ஆவார். தமிழில் இவர் ‘அசுரவதம்’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கதகளி’, ‘மதயானை கூட்டம்’, ‘வேட்டை’, ‘கும்கி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Similar News