நந்தினி தயிர் விலை ரூ.3 உயர்வு - மக்கள் அதிர்ச்சி..!!
நந்தினி தயிர் விலை ரூ.3 உயர்வு - மக்கள் அதிர்ச்சி..!!
கடந்த மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் தயிருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது. இதனால் தயிர் விலையை உயர்த்தும் நிலை உருவானது. அதன்படி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நந்தினி பால் கூட்டமைப்பின் தயிரின் விலை உயர்த்தப் பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (கே.எம்.எப்) சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நந்தினி பால் கூட்டமைப்பில் உற்பத்தி செய்யப்படும் 200 கிராம் கட்டி தயிர் பாக்கெட் ரூ.10 -ல் இருந்து ரூ.12- ஆகவும், 500 கிராம் பாக்கெட் ரூ.22 -ல் இருந்து ரூ.24 ஆகவும், முழு பாக்கெட் ரூ.43-ல் இருந்து ரூ.46 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலானது.
அதேபோல மோரின் விலை 200 மி.லி மோர் ரூ.7-ல் இருந்து ரூ.8 ஆகவும், லசி 200 மி.லி ரூ.10-ல் இருந்து ரூ.11 ஆக உயர்ந்துள்ளது. இவை பாக்கெட்டுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாக்கெட்டிற்கும் ரூ.1 முதல் ரூ.3 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று (திங்கட்க்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளதாக கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (கே.எம்.எப்) அறிவித்துள்ளது.