துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் மகள் செய்த கேவலமான காரியம்..!!

துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் மகள் செய்த கேவலமான காரியம்..!!

Update: 2022-06-30 11:33 GMT

ஒருவர் இறந்துவிட்டால் நாம் செல்வதன் காரணம் நாம் திரும்பி அந்த முகத்தை எப்போ பார்க்க முடியும் என்று தான். ஒருவர் இறந்ததிற்கு நாம் செல்வது அவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை.. இறப்பே வாழ்க்கையின் இறுதி முடிவு. நாம் அதை ஒதுக்கி விடவும் முடியாது. விலகவும் முடியாது. என்ன நடக்க போகிறது என யூகிக்கவும்  முடியாது.அப்படிப்பட்ட துக்க நிகழ்ச்சிக்கு வந்த இளம்பெண் நகைகளை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்படி ஒரு சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது  

திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவரது மனைவி காலமானார். இவரது துக்க நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்தள்ளனர். அப்போது, கருப்பையா வீட்டிலிருந்து சுமார் 48 பவுன் நகைகள் காணாமல்போனது.

பின்னர் இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையாவின் தம்பி மகளான கெளசல்யா (22), தான் தான் அந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து கெளசல்யாவிடம் இருந்த 28 பவுன் நகைகளை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த பெரியம்மா இறந்த நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண், நகைகளை திருடியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News