பல கோடி மதிப்புள்ள நடராஜர், கிருஷ்ணர் சிலைகள் மீட்பு.!!

பல கோடி மதிப்புள்ள நடராஜர், கிருஷ்ணர் சிலைகள் மீட்பு.!!

Update: 2022-02-19 04:10 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் தொன்மை வாய்ந்த சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவின்படி அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 2 அடி உயரம் கொண்ட திருவாட்சியுடன் கூடிய நடராஜர் சிலை ஒன்றும், அதே போன்று ஒரு அடி உயரம் கொண்ட சிறிய நடராஜர் உலோக சிலை ஒன்றும், இதேபோன்று ஒரு அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் சிலைகளை  மேலும் 11 வேற்று மொழிகளால் எழுதப்பட்ட பௌத்த மத மந்திர பேழைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
இதுதொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த சிலைகளுக்கான முழு ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் பதினோரு மந்திர பேழைகள், அதேபோன்று நடராஜர் மற்றும் சிலைகளை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News