சூர்யாவுக்கு தேசிய விருது.. நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

சூர்யாவுக்கு தேசிய விருது.. நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!;

Update: 2022-07-24 20:30 GMT

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News