கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைகிறது..!!

கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைகிறது..!!

Update: 2022-05-15 14:38 GMT

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது. இதில், கற்கள் ஏற்றி சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கி கொண்டன. இதில், டிரைவர்கள், தொழிலாளர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர்.  2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கல்குவாரியில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News