#BIG NEWS:- நாடு முழுவதும் தடை.. ஜூலை 1-ம் தேதி முதல் அமல்..!

#BIG NEWS:- நாடு முழுவதும் தடை.. ஜூலை 1-ம் தேதி முதல் அமல்..!

Update: 2022-06-28 14:40 GMT

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்குமான தடை நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி பிளாஸ்டிக் குச்சிகளுடனான இயர் பட்ஸ், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கோப்பைகள், முள் கரண்டி, கரண்டி, கத்தி, உறிஞ்சு குழாய், தட்டம், இனிப்பு பொட்டலங்களை சுற்றும் படலம், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட், பிளாஸ்டிக் அல்லது 100 மைக்ரோன்களுக்கு குறைவாக உள்ள பிவிசி பதாகைகள், கிளறு குச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News