களைகட்டியது நயன்தாரா- விக்கி திருமண நிகழ்ச்சி- ரஜினிகாந்த், ஷாருக் கான் பங்கேற்பு !

களைகட்டியது நயன்தாரா- விக்கி திருமண நிகழ்ச்சி- ரஜினிகாந்த், ஷாருக் கான் பங்கேற்பு !

Update: 2022-06-09 10:11 GMT

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. காலை 7.30 மணிக்கு நிகழ்வு துவங்கி நடைபெற்று வருகிறது. 

திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா திருமணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகைதந்து பங்கேற்றுள்ளார். 

நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினருடன் வந்தார். இயக்குநர் அட்லி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் வருகை தந்து உள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள் திருமண இடத்திற்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும், அது இல்லாமல் அரங்கிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்குள் இந்த நிகழ்வு நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

 
newstm.in

Similar News