சசிகலாவை பாஜகவுக்கு வரவேற்கும் நயினார் நாகேந்திரன்!!

சசிகலாவை பாஜகவுக்கு வரவேற்கும் நயினார் நாகேந்திரன்!!

Update: 2022-06-02 08:27 GMT

சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் முழு மனதோடு வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வருகையால் பாரதிய ஜனதா கட்சி வலுப்பெறும். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும்எனினும் அவர் அதிமுகவில் இணைந்தாலும் அக்கட்சியும் பலம் பெறும் என தெரிவித்தார்.

அவருக்கென தொண்டர் பலம் இருப்பதால் எங்கு சேர்ந்தாலும் அக்கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்பாரதிய ஜனதா கட்சி அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது தொடர்பான  கேள்விக்கு பழுத்த பழம் இருக்கும் மரம் தான் கல் எறி படும் என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தற்போது அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல்வேறு கட்சியினர் பாஜக மீது விமர்சனத்தை முன் வைக்கின்றனர் என தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 25 தொகுதிகளுக்கு மேல் தமிழகத்தில் இருந்து வெற்றி பெறுவோம். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி பலமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

Similar News