எமனாக மாறும் நீட் தேர்வு!! தொடரும் தற்கொலைகள்..!!

எமனாக மாறும் நீட் தேர்வு!! தொடரும் தற்கொலைகள்..!!

Update: 2022-06-30 19:32 GMT

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. ஒருபுறம் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் மத்திய அரசு அதனை ரத்து செய்யாமல் இருக்கும் நிலையில் மறுபுறம் மாணவ மாணவியர் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதி அதில் அல்லது தோல்வி பயத்தால் மருத்துவராக முடியாது என்று மனமுடைந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். 

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் - ஜெயந்தி தம்பதி. இவர்களது இரண்டாவது மகனான தனுஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். இவர் தந்தை பிரதாப் ஆட்டோ ஓட்டுநராகவும், தாய் ஜெயந்தி இட்லி வியாபாரமும் பார்த்து வருகின்றனர். 

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காமல் போயுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட்டால் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News