நீட் தேர்வு கட்டணம் உயர்வு!!

நீட் தேர்வு கட்டணம் உயர்வு!!

Update: 2022-04-08 07:49 GMT

நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்வை வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்த இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது

தேர்வுக்கு மே 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், 3ஆம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800-லிருந்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழிக்கட்டணத்துக்கான செலவு, ஜி.எஸ்.டி வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News