நீட் மதிப்பெண் விவரம் – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

நீட் மதிப்பெண் விவரம் – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

Update: 2022-06-08 06:15 GMT

முதுகலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விபர பட்டியலை இன்று  முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், குறைந்தபட்ச மதிப்பெண் (Cut-Off ), தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் (Marks), தகுதி பட்டியல் (Rank List) ஆகியவை வெளியிடப்பட்டன.

இந்நிலையில் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விபர பட்டியலை இன்று  முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். nbe.edu.in என்ற இணைய தளத்தில் முகப்பு பக்கத்தில், NEET-PG என்ற இணைப்பை கிளிக் செய்து, பதிவெண் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்.

Download NEET-PG Scorecard என்பதை கிளிக் செய்து, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து, மதிப்பெண் விபர பட்டியலை கலந்தாய்விற்கு எடுத்து செல்ல வேண்டும். 50% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats) பட்டியல் தனியாக வெளியிடப்படும்.

மாநில தொகுப்பு இடங்களுக்கான (State Government Quota Seats ) மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாநிலங்கள் தனித்தனியே வெளியிடும். தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

newstm.in

Similar News